search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஃப்யூகோ எரிமலை"

    கவுதமாலாவில் உள்ள ஃப்யூகோ எரிமலை கடந்த வாரம் வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட கரும்புகை மற்றும் சாம்பல் காரணமாக அங்குள்ள விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. #GautemalaVolcanoEruption #FeugoVolcano

    கவுதமாலா சிட்டி:

    கவுதமாலாவில் உள்ள ஃப்யூகோ எரிமலை கடந்த வாரம் வெடித்துச் சிதறியது. இதில் 110 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். 

    இந்நிலையில் எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட புகை மற்றும் சாம்பல் காரணமாக அங்குள்ள விமான நிலையம் மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. கவுதமாலா பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளில் நலன்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஃப்யூகோ எரிமலை மீண்டும் வெடித்து சிதறலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #GuatemalaVolcanoEruption #FeugoVolcano
    கவுதமாலாவில் உள்ள ஃப்யூகோ எரிமலை கடந்த வாரம் வெடித்துச் சிதறியதில் பெண் ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 50 பேர் காணாமல் போயிருக்கிறார்கள். #GautemalaVolcanoEruption #FeugoVolcano

    கவுதமாலா சிட்டி:

    கவுதமாலாவில் உள்ள ஃப்யூகோ எரிமலை கடந்த வாரம் வெடித்துச் சிதறியது. இதில் 110 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் எரிமலை சாம்பலில் சிக்கி யூஃபிமியா கார்சியா என்பவரின் உறவினர்கள் 50 பேர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. 

    50 வயதான கார்சியாவுடன் 9 பேர் பிறந்துள்ளனர். மூன்று தலைமுறை கண்ட கார்சியாவின் 75 வயது தாயும் இந்த எரிமலை வெடிப்பில் காணாமால் போயிருக்கிறார். பல நாட்களாகியும் என் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் என 50 பேரை காணவில்லை என கார்சியா கவலையுடன் கூறுகிறார். #GautemalaVolcanoEruption #FeugoVolcano
    ×